பிக்பாஸ் வீட்டுக்குள் விக்ரமனிடம் பேசிக்கொண்டிருக்கும் GP முத்து, அவரை திருமணம் செய்துகொள்ளும்படி அவருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

Also Read | BB6 Tamil : டாஸ்க் முடிஞ்சு வெளிய வந்ததும் கண்ணீர் விட்ட அசீம்.. இதான் காரணம்!!
கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 தினந்தோறும் நடைபெறும் பல்வேறு விதமான வேடிக்கைகள், கிண்டல் நிறைந்த விவாதங்கள், டாஸ்க்குகள் என களைகட்டத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே இந்த சீஸனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில் வெற்றிபெற்று கேப்டனாக பொறுப்பு ஏற்றிருக்கிறார் GP முத்து. இந்நிலையில், கார்டன் பகுதியில் அவர் விக்ரமனுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என கேட்கிறார் GP முத்து. அதற்கு இல்லை என விக்ரமன் பதில் அளிக்க, "திருமணம் செய்தபின்னர் தான் பல விஷயங்கள் புரியும்" என உருக்கமாக சொல்கிறார் முத்து.
விக்ரமனிடத்தில் பேசும்போது,"கல்யாணம் செய்யுறதுக்கு முன்னாடி அதுல என்ன இருக்குன்னு நினைப்பேன். ஆனா, கல்யாணம் செஞ்ச அப்பறம் தான் பல விஷயங்கள் தெரியுது. தின்பண்டம் வாங்கிட்டு போகும்போது, பிள்ளைகள் அதை பிரிச்சு சாப்பிடுறத பாக்குறதே சந்தோசம் தான். அதுமாதிரி, பிள்ளைகள் ஸ்கூல் போயிட்டு ஓடிவந்து கட்டிப்பிடிச்சுக்கும். அதுல ஒரு சந்தோஷம்" என்கிறார். வழக்கமாக கலகலப்புடன் இருக்கும் GP முத்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவில் தனது குடும்பத்தினருடன் பேசும்போது கண்கலங்கியபடி பேசியிருந்தார். இந்நிலையில், விக்ரமனிடத்தில் அவர் தனது குழந்தைகள் குறித்து உருக்கமாக பேசிய வீடியோ அவரது ரசிகர்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Also Read | விஜய் சேதுபதி & விஷ்ணு விஷால் நடிக்கும் "இடம் பொருள் ஏவல்".. ரிலீஸ் எப்போ? செம அப்டேட்