பிக்பாஸில் போட்டு வைத்துள்ள பிளான் குறித்து சக போட்டியாளர்கள் கேட்க அதற்கு ஜிபி முத்து சொன்ன பதில், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

Also Read | Bigg Boss 6 Tamil : “பிச்சை எடுத்துடுவேன்னு பயந்து என் அம்மா”.. ஷிவின் கணேசனின் கண்ணீர் கதை.!
பிக்பாஸ் 6 வது சீசனின் ஆரம்பம் முதலே, வீட்டிற்குள் நடக்கும் அனைத்து விஷயங்களும் பெரிய அளவில் இணையத்தில் பேசு பொருளாகவும் மாறி வருகிறது.
டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால் இதுகுறித்த கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில் எப்போதும் பேசு பொருளாக இருப்பதையும் நாம் காண முடியும்.
அதே போல, ஆரம்பத்தில் கலகலப்பான ரூட் எடுத்த பிக்பாஸ், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் போட்டிகள் மூலம் தற்போது டாப் கியரிலும் சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே, புதிய போட்டியாளராக முதல் வார இறுதியில் மைனா நந்தினி கலந்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாகவும் ஜிபி முத்து செயல்பட்டு வருகிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் பல பரபரப்பான விஷயங்கள் இயங்கிக் கொண்டே இருக்கும் அதே வேளையில், முதல் நாள் முதல் இந்த தருணம் வரை தொடர்ந்து தானும் ஜாலியாக இருந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் கலகலப்பாக வைத்து வருகிறார் ஜிபி முத்து. இதன் காரணமாக, தொடர்ந்து அவரை பின்பற்றும் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அது மட்டுமில்லாமல், பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் பலரது பேவரைட் நபராகவும் ஜிபி முத்து வலம் வருகிறார். அந்த வகையில், பிக்பாஸில் ஜிபி முத்து போட்டு வைத்துள்ள பிளான் குறித்து சக போட்டியாளர்கள் கேட்கின்றனர். பிக்பாஸில் வெற்றி பெற வைத்துள்ள Strategy பற்றியும், என்ன பிளான் வைத்துள்ளீர்கள் என்பது பற்றியும் சக போட்டியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் ஜிபி முத்து, "பிக்பாஸ பாத்தாச்சு, கிளம்புவோம்" என சாதாரணமாக சொல்கிறார். பிக்பாஸ் போன்ற போட்டிகளில் வெற்றி பெற உள்ளே ஒரு போட்டியாளர் ஆடும் கேம் பிளான் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால், மிகவும் சர்வ சாதாரணமாக வந்தாச்சு இனி கிளம்ப வேண்டியது தான் என்ற தொனியில் ஜிபி முத்து குறிப்பிட்டுள்ளார்.
போட்டி என்பதை தாண்டி, பிக்பாஸ் வீட்டை ஒரு குடும்பம் போல தான் ஜிபி முத்து காண்பதாகவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | கிராமத்து 'கும்மி டான்ஸ்ல' இவ்ளோ வெரைட்டியா.. செம Vibe -ல் ஜிபி முத்து, மைனா.!