தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

Also Read | "இப்பவும் அப்படியே இருக்கார்".. விஜய்யை சந்தித்த பிரபல தமிழ் இயக்குனர் & நடிகர்! வைரல் ட்வீட்
பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது.
இதனிடையே, தொடர்ந்து கலகலப்பாக இருந்து வந்த ஜிபி முத்து திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு போக வேண்டும் என அழுது புலம்பி கொண்டிருப்பது தொடர்பான விஷயம், போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஜிபி முத்து கமலிடம் புலம்பியது, மழையில் ஆட்டம் போட்டது, அனைத்து அணிகளுக்கும் உதவி செய்தது, முதல் வார இறுதியில் தனக்கு வந்த கடிதம் குறித்து ஜிபி முத்து சொன்ன வேடிக்கையான பதில் என அவரை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயமும் பிக்பாஸ் வீட்டில் அவரை முதன்மை போட்டியாளராகவும் நிறுத்தி வருகிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஜிபி முத்து மிகவும் மனம் பாதிக்கப்பட்டதாக கேமரா முன்னாள் பேசி இருந்தார். இதன் பின்னர் அவரை சக போட்டியாளர்கள் தேற்ற, கடைசியில் Confession ரூமில் அழைத்து பிக்பாஸ் கூட தேற்றி அனுப்பி இருந்தார்.
இந்த சம்பவம் பிக்பாஸ் வீட்டில் பெரிய அளவில் பேசு பொருளாகவும் மாறி இருந்தது. இதற்கு மத்தியில், அமுதவாணன் குறித்து ஜிபி முத்து பேசி இருந்த விஷயங்களும் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.
ஜனனி, ஜிபி முத்து, அமுதவாணன், மணிகண்டன் உள்ளிட்டோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜிபி முத்துவிற்கு ஐந்து அசிஸ்டென்ட் மேனேஜர்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார். தொடர்ந்து, முத்துவிற்கு அமுதவாணன் அசிஸ்டென்ட் மேனஜர் என்றும் ஜனனி சொல்ல, இதற்கு ஜிபி முத்து சொன்ன பதில் தான், பார்வையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
"அவரு எவ்ளோ பெரிய ஆளு. அவரு கால் தூசுக்கு காணுமா நம்ம. தங்கச்சி, அண்ணன் (அமுதவாணன்) ஒரு புயல். நாம அதுல ஒரு தூசு" என ஜிபி முத்து சொன்னதும், 'தன்னடக்கம்' என அமுதவாணன் சொல்கிறார். தொடர்ந்து பேசும் ஜிபி முத்து, "நான் எப்பவும் அப்டி தான். உங்க திறமைக்கு வர முடியாது. அப்படி எல்லாம் நீங்க பேசக் கூடாது" என்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் ஜிபி முத்து - அமுதவாணன் இடையே வேடிக்கையான உரையாடல்கள் நடந்தாலும், அமுதவாணன் மீது ஜிபி முத்துவிற்குள் இருக்கும் மரியாதை தற்போது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Also Read | முழு டபுள் ஆக்சன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன மாஸான பதில்!