திரைப்பட ஷூட்டிங் நடத்த தமிழக அரசு முக்கியமான விதியை நேற்று அறிவித்துள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக திரைப்பட ஷூட்டிங் மற்றும் தியேட்டர்கள் செயல்படாமல் இருந்தன. இதனிடையே சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சினிமா ஷூட்டிங் நடத்தவும் அண்மையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சினிமா ஷூட்டிங்கை தொடங்குவதற்கான விதிமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் திரைப்பட படப்பிடிப்புகளை 75 நபர்களை மட்டுமே கொண்டு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு, பொதுமக்கள், ரசிகர்கள் என எவரும் அனுமதிக்கப்பட கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் திரைப்பட ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.