Behindwoods Gold Medals விருதின் 7 ஆண்டுகால வெற்றியைத் தொடர்ந்து மிக அண்மையில் 2021, மார்ச் 7-ஆம் தேதி நடந்த Behindwoods Gold Icons - டெலிவிஷன், டிஜிட்டல் மற்றும் சோஷியல் விருதுகள் வழங்கும் விழாவில் பல்வேறு பிரபலங்கள் விருதுகளை பெற்றனர்.

மா.கா.பா.ஆனந்த், பிரியங்கா, புகழ், மணிமேகலை உள்ளிட்டோர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில் டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சோஷியல் பிளாட்ஃபார்ம்ங்களில் சாதனை படைத்தோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஆரி, அஸ்வின், சிவாங்கி, மதன் கௌரி உள்ளிட்டோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
இதில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல-யுமான சுரேஷ் ரெய்னாவுக்கு The Golden Globe Icon of the Inspiration - Sports விருது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைகளால் வழங்கப்பட்டது. இதேபோல் இந்நிகழ்வில் 96 பட 'குட்டி த்ரிஷா' கௌரி கிஷன் கலந்துகொண்டு THE BEHINDWOODS GOLD BEST ACTOR DEBUT FOR PAAVA KADHAIGAL விருதினை நடிகர் ஜாஃபருக்கு அளித்தார்.
இதனிடையே கௌரி கிஷன் தமது ட்விட்டர் பக்கத்தில், “இதுதான் நடந்தது. சின்ன தல சுரேஷ் ரெய்னாவை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.