விஜய் சேதுபதியை தொடர்ந்து விஜய்யின் ‘தளபதி 64’-ல் இணைந்த ‘96’ ஸ்டார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்.25ம் தேதி ரிலீசான ‘பிகில்’ திரைப்படம் வசூலில் வெறித்தனம் காட்டி வருகிறது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு தளபதி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனை தொடர்ந்து தளபதி64 படத்தின்  ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யோடு விஜய் சேதுபதி, சாந்தனு மற்றும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் டெல்லியில் துவங்கவுள்ள நிலையில் தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி - திரிஷாவின் "96" படத்தில் நடித்த கௌரி கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Gouri Kishan playing a college student in Thalapathy 64

People looking for online information on Thalapathy 64, Vijay will find this news story useful.