VIRUMAN: "முன்பே டைரக்டர் ஆயிட்டேன்.. ஆனா ஷங்கர் படமெடுக்க வந்ததும் பயந்துட்டேன்.!" - பாரதிராஜா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோதிகா & சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.

Advertising
>
Advertising

இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைகிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

Also Read | "சூர்யா National Award வாங்கிட்டான்.. அடுத்து கார்த்தி" - வாழ்த்திய பாரதிராஜா

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாநகரில் நடந்தது, படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்குநர் ஷங்கர் குறித்து பேசினார். அதில், “ஷங்கர் .. நான் பார்த்து பிரம்மித்த ஒருவன். நான் ஷங்கருக்கு முன்னாடியே டைரக்டர் ஆகிட்டேன். ஆனால் ஷங்கர் வந்ததுமே நான் பயந்துவிட்டேன். என்ன.? இப்படியெல்லாம் படம் எடுக்க முடியுமா? மரம், செடி, கொடி, மரம், காதல், மேகம் என குறுகிய வட்டத்திலேயே நான் சிந்தித்தேன்.

ஒரு சராசரி மனிதனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது ஷங்கரின் சிந்தனை. இன்றைக்கும் ஷங்கரின் படங்கள் உலகத்தரத்திலே நம்மை வியக்க வைக்கும் திரைப்படங்கள்.” என்று தெரிவித்தார்.

Also Read | "அவ்ளோ செல்வாக்கு.. ஆனாலும் சூர்யா, கார்த்தி ரிக்‌ஷா-ல School போனாங்க" - விருமன் விழாவில் பாரதிராஜா

தொடர்புடைய இணைப்புகள்

Got fear after shankar arrival bharathiraja viraman audio launch

People looking for online information on Bharathiraja, Viruman, Viruman Audio Launch will find this news story useful.