விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடர், ஒவ்வொரு எபிசோடிலும் பல பரபரப்பான திருப்பங்களுடன் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

Also Read | போடு.! கம்பேக் கெடுக்கும் நடிகை ஜெனிலியா.. Viral ஃபர்ஸ்ட் லுக்.. வாழ்த்திய நடிகர்.!
மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்த கோபி, தற்போது ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது பாக்கியலட்சுமி தொடர் பெரும் விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருக்கிறது.
கோபியின் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்து வருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
அது மட்டுமில்லாமல், சமீபத்தில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் சமீபத்தில் நடந்திருந்தது. அப்போது கொடைக்கானலில் வைத்து கோபி - ராதிகா நடந்த சண்டைகளும், கேம் என்ற பெயரில் நடந்த வேடிக்கைக்குகளும் அதிகம் பார்வையாளர்கள் கவனத்தை பெற்றிருந்தது.
அங்கே பல பஞ்சாயத்துகள் முடிந்த பிறகு இரண்டு குடும்பங்களும் மீண்டும் வீட்டிற்கு திரும்பி இருந்தனர். அப்படி ஒரு சூழலில், பாக்கியலட்சுமி இருக்கும் வீட்டிற்கு அருகேயுள்ள வீட்டில் ராதிகா மற்றும் மயூரா ஆகியோருடன் வந்து குடியேறுகிறார் கோபி.
இந்த நிலையில், பிரியாணிக்காக ஆசைப்பட்டு கோபி அல்லல்படுவது தொடர்பான விஷயம், பாக்கியலட்சுமி தொடரின் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. கோபி மற்றும் மயூரா ஆகியோர் வீட்டில் அமர்ந்திருக்க, இருவருக்கும் பிரியாணி வாசனை வருவதை உணர்கின்றனர். அப்போது மயூராவிடம், "உங்க மம்மி நமக்காக ஸ்பெஷல் பிரியாணி செய்கிறார்" என் ஆர்வமாக கோபி கூறுகிறார். ஆனால், "இல்ல அங்கிள், மம்மி பண்ணா இந்த மாதிரி வாசனை வராது" என மயூரா சொல்கிறார்.
பதிலுக்கு கோபியோ, "இல்ல இல்ல இங்க இருந்து தான் வாசனை வருகிறது. இங்க இருந்து தான் வருகிறது என்றால் உன் மம்மி தான் தயார் பண்றாங்க" என குதூகலமும் அடைகிறார். மேலும் கடும் பசியில் தான் இருப்பதாகவும், ஒரு கட்டு கட்டி விட வேண்டியது தான் என்றும் அவர் முடிவு செய்கிறார். தொடர்ந்து, கோபி மற்றும் மயூராவை சாப்பிட ராதிகா அழைத்ததும் பிரியாணி என்ற நினைப்பில் உற்சாகமாக அவர்கள் செல்கின்றனர்.
ஆனால், அங்கே பிரியாணி இல்லை என கோபிக்கு தெரிய வரவே அவர் ஏமாந்து போகிறார். பின்னர், ராதிகாவிடமும் பிரியாணி செய்யவில்லையா என கோபி கேட்க, "நான் எப்போ பிரியாணி பண்றேன்னு சொன்னேன்?" என ராதிகா கேட்கிறார். "வாசனை வந்துச்சே" என சந்தேகத்துடன் கோபி கேட்க, "பக்கத்து வீட்டுல இருந்து வந்துருக்கும் கோபி" என ராதிகா பதில் சொல்கிறார்.
பசியுடன் பிரியாணி சாப்பிட போகிறோம் என காத்திருந்த கோபிக்கு பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது.
Also Read | Doll Task : அசீம் - விக்ரமன் விஷயத்தில் Bigg Boss எடுத்த முடிவு?.. அடுத்தது என்ன??