இந்த தடவையாவது மாட்டுவாரா..? முதல்முறை கோபி VS ராதிகா… பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Gopi clash with Radhika and doubted bhagyalakshmi
Advertising
>
Advertising

பாக்கியலட்சுமி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்களில் ஒன்று. இந்த தொடர் இதுவரை 400 க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த தொடரில் சுசித்ரா, சதிஷ்குமார், திவ்யா சுரேஷ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் மையக் கதாபாத்திரங்களில் ஒன்றான செழியன் கதாபாத்திரத்தில் இதுவரை நடிகர் ஆர்யன் நடித்துவந்தார்.

Gopi clash with Radhika and doubted bhagyalakshmi

சிக்காத கோபி…

இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்த கோபி, ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல், பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவையும் கோபி எடுத்தார். பாக்கியலட்சுமியை ஏமாற்றி எப்படியாவது விவாகரத்து வாங்கிவிட வேண்டும் என குறுக்கு வழிகளை மேற்கொண்டார்.  ஆனால் அவரின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. இது சம்மந்தமான நீதிமன்றக் காட்சிகள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின.

பாக்கியலட்சுமி vs கோபி vs ராதிகா…

ஆனால் எந்த நேரமும் கோபி- ராதிகா விவகாரம் அவரது குடும்பத்துக்கு தெரிந்து மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் கோபி எப்படியாவது தப்பித்து சென்று கொண்டிருக்கிறார். இதனால் கோபியின் கதாபாத்திரம் சமூகவலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த கதாபாத்திரத்தை வைத்து மீம்கள் மற்றும் ட்ரோல்கள் வெளியாகி வருகின்றன.

விறுவிறுப்பான எபிசோட்கள்….

சமீபத்தில் நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்- பாக்கியலட்சுமி சங்கமத்தில் கூட கோபி மாட்டினாலும், அதிலிருந்து தப்பித்துவிட்டார். இந்நிலையில் தற்போது கோபி போனில் ராதிகாவோடு பேசுவதைப் பார்த்து பாக்கியலட்சுமிக்கு முதல் முறையாக கோபி மேல் ஏற்பட்டுள்ளது. அதே போல ராதிகா “ஒரே ஒரு தடவை உங்க குடும்பத்துல உள்ளவங்கள பாக்கணும்” எனக் கேட்க, அதை மறுக்கிறார் கோபி. அதனால் கோபமாகும் ராதிகா, கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முதல் முறையாக ராதிகாவுக்கும் கோபிக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. வீட்டிலும் பாக்கியாவுக்கு கோபி மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல்களில் இருந்து கோபி வழக்கம் போல தப்பித்துவிடுவாரா இல்லை மாட்டிக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து வரும் எபிசோட்கள் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Gopi clash with Radhika and doubted bhagyalakshmi

People looking for online information on Bhagyalakshmi, Gopi, Vijay tv will find this news story useful.