பல திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றும் இயக்குநர்களின் கனவுத் திட்டமாக பல ஆண்டுகளாக நீடித்து வந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் இயக்கும் தகவல் வெளியானது முதலே ஏறக்குறைய உலக அளவிலான தமிழர்கள் அனைவருமே எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, லால், ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரியாஸ் கான் உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் பணிபுரியும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பகுதியின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் கூட்டாக தயாரிக்கும் இந்த படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணியை கவனித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள இந்த போஸ்டரில், உறுமும் புலியின் உருவம் கொண்ட ஒரு கேடையமும், அதனுடன் ஒரு வாளும் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: “இன்னொரு Deleted Kissing Scene-ம் இருக்கு”.. 'வாழ்' ஹீரோ.. ஹீரோயின் செம்ம fun Ride!