'பிரேமம்' அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் 'கோல்டு'.. தள்ளிப்போன ரிலீஸ் தேதி.. காரணம் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எர்ணாகுளம்: 'கோல்டு' படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Gold will be releasing one week after Onam Alphonse Puthren
Advertising
>
Advertising

இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், பிரேமம் படத்தை தொடர்ந்து  கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படம் திரில்லர் வகைமையில் உருவாகி வருகிறது. இந்த படத்தை  நடிகர் பிரித்விராஜ் ஹீரோவாக நடித்து தயாரிக்கவும் செய்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

Gold படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் அறிவித்திருந்தார்.

Gold will be releasing one week after Onam Alphonse Puthren

கோல்ட் படம் வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி ஓணம் திருநாளை முன்னிட்டு தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அல்போன்ஸ் புத்ரன் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அந்த பதிவில்,"எங்கள் தரப்பில் வேலை தாமதம் காரணமாக “கோல்டு” ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் கழித்து வெளியாகிறது. தாமதத்திற்கு எங்களை மன்னியுங்கள். "கோல்டு" வெளியாகும் போது இந்த தாமதத்தை எங்கள் வேலையின் மூலம் ஈடுசெய்வோம் என்று நம்புகிறோம்". என அல்போன்ஸ் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை வலிமை படத்தின் கோயம்புத்தூர் ஏரியா வினியோகஸ்தரான SSI புரொடக்ஷன்ஸ் சுப்பையா கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாநாடு படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் சமத் தனது ட்ரூத் க்ளோபல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கைப்பற்றி உள்ளார்.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி நெட்வொர்க்கின் சூர்யா & சன் டிவி தொலைக்காட்சி சேனல்கள் கைப்பற்றி உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன்  40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Gold will be releasing one week after Onam Alphonse Puthren

People looking for online information on Gold, Nayanthara, Prithvi Raj will find this news story useful.