சூர்யா நடிக்கும் 39வது படத்தினை சூர்யாவின் படத்தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜெய்பீம்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார்.
இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பழங்குடியின மக்களின் பின்னணியில் வழக்கறிஞராக சூர்யா நிற்பதுபோல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவாகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தை 'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். அகரம் பவுண்டேஷனின் மிக முக்கிய வழிகாட்டல் குழு பொறுப்பில் உள்ளவர் தான் தா.செ ஞானவேல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யா உடன் 'கர்ணன்' ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோமோல் ஜோஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டான் இசையமைக்கிறார்.
இந்தப்படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 2 ஆம் நாள் வெளியாகிறது. இந்த படம் சென்சார் போர்டு மூலம் தணிக்கை செய்யப்பட்டு A சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த படம் 2 மணி நேரம் 44 நிமிடம் ஓடும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தின் சிறு முன்னோட்டத்தை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.