விஜய் நடித்த கில்லி, சுந்தர்.சி நடித்த தலைநகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் 'கில்லி' மாறன் காலமானார்.

தமிழ், தென்னிந்திய, இந்திய திரைத்துறையில் அடுத்தடுத்த மரண சம்பவங்கள் திரையுலகையும் பொதுமக்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளன. தமிழ்த்திரைப்படத் துறையில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், தாமிரா, கே.வி.ஆனந்த் மற்றும் நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா உள்ளிட்டோரின் மரண சம்பவம் கலங்கவைத்தன.
தவிர பாடகர்கள் எஸ்.பி.பி, ஆடோகிராஃப் கோமகன், டிகேஎஸ் நடராஜன் மரண சம்பவம் பெரும் கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளன. மேலும் நடிகர் கல்தூண் திலக், நடிகர் ஜோக்கர் துளசி, நடிகர் மாரி செல்லதுரை மற்றும் கஜினி பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் உள்ளிட்டோர் நேற்றுவரை அடுத்தடுத்த மரணித்த திரைப் பிரபலங்கள் ஆவர்.
இந்நிலையில் விஜய் நடித்த கில்லி படத்தில் அனைவரையும் சிரிக்க வைத்த மாறன் கொரோனா பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் டிஷ்யூம், தலைநகரம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இவருடைய மறைவுக்கு திரைப்பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: 'சிம்பு'வின் மாநாடு First Single ரிலீஸ் அப்டேட்.. தயாரிப்பாளர் கூறிய உருக்கமான தகவல்.