THALAPATHY 67 : "காரப் பொரி சாப்பிடனும்😍".. விஜய் & த்ரிஷாவுடன் கில்லி-ஐ SYNC செய்த FANS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவில் கில்லி படத்தின் வசனத்தை ரசிகர்கள் SYNC செய்து பகிர்ந்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | தளபதி 67 படத்தின் பூஜை.. கலந்து கொண்ட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள்..! வீடியோ

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

நேற்று முன்தினம் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.  இந்த படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் விஜய் - த்ரிஷா ஜோடி இணைந்து நடித்துள்ளது குறிப்படத்தக்கது.

இந்நிலையில் கில்லி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன் வரும் காட்சியில் நடிகை த்ரிஷா பேசும் பிரபல வசனமான "எனக்கு காரப் பொரி சாப்பிடனும் போல இருக்கு" என்ற வசனத்தை தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவில் உள்ள ஒரே வினாடி நீளமுள்ள காட்சி துணுக்கில் ரசிகர்கள் Synchronisation செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

த்ரிஷா - விஜய் கூட்டணி 14 வருடங்களுக்கு பிறகு தளபதி 67 படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 19 வருடங்களுக்கு முந்தைய தங்களது கில்லி நினைவுகளை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்த படத்தில் பணிபுரிவது குறித்து நடிகை த்ரிஷா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " இதனை எதிர்பார்த்து காத்திருந்த, வாழ்த்திய அனைவருக்கும்" என தலைப்பிட்டு விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Also Read | WAR, பதான் பட இயக்குனருடன் இணையும் பிரபாஸ்?.. அடுத்த PAN INDIA படம் ரெடியாகுதா? முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Ghilli Scene Synchronised with Thalapathy 67 Pooja Video

People looking for online information on Ghilli Scene, Lokesh Kanagaraj, Thalapathy 67, Thalapathy 67 pooja, Trisha Krishnan, Vijay will find this news story useful.