துணிவு படத்தின் 2-வது சிங்கிள் பாடல் இதுதானா?.. வைரலாகும் ஜிப்ரான் - வைசாக் ட்வீட்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் அடுத்த சிங்கிள் குறித்து ஜிப்ரான் & வைசாக் ட்வீட் செய்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | செம்ம டான்ஸ்.. ரஞ்சிதமே பாட்டுக்கு நடனமாடி அசத்திய குயின்ஸி & ஷெரினா! வீடியோ

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.



துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா மூன்று நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 1.3 மில்லியன் லைக்குகளுடன் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் காசேதான் கடவுளடா பாடலை ஜிப்ரான் இசையில்  பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டிவிட்டர் பக்கத்தில் காசேதான் கடவுளடா என டிவீட் செய்துள்ளார். மேலும் பாடலாசிரியர் வைசாக், Money Money Money என டிவீட் செய்துள்ளார். இந்த டிவிட்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்கள் இந்த சிங்கிள் பாடலை எதிர் நோக்கி உள்ளனர்.

 

Also Read | TRENDING: "தளபதி 67" தீபாவளி ரிலீஸா?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Ghibran Vaisagh Tweet about Thunivu Second Single Song

People looking for online information on Ajith Kumar, Ghibran, Thunivu, Thunivu Second Single Song, Vaisagh will find this news story useful.