GANGSTAA: துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள்.. பாடியுள்ள பிரபல இசையமைப்பாளர்! போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Advertising
>
Advertising

Also Read | ‘யார் ஃபேவரிட்டஸம் பண்றா?’.. அமுது & மைனா இடையே உருண்ட பழைய பிரச்சனை..! bigg boss 6

இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

இந்நிலையில் துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா என்ற பெயரில் அமைந்துள்ளது என இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட் செய்துள்ளார்.  மேலும் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் & பாடகர் சபீர் பாடியுள்ளார் என்றும் ஜிப்ரான் அறிவித்துள்ளார்.

Also Read | VIDEO: ‘பயமுறுத்துற வேலை வெச்சுக்காதீங்க’.. “அசிம்க்கு Attitude..”.. நடிகை தேவிப்ரியா Breaking Interview

தொடர்புடைய இணைப்புகள்

Ghibran Tweet about Thunivu Third Single Song Gangsta

People looking for online information on Ajith Kumar, Ghibran, Thunivu, Thunivu Third Single Song, Thunivu Third Single Song Gangsta will find this news story useful.