திரைத்துறையில் அடுத்தடுத்து திரைப்பிரபலங்களுக்கு ஏற்படும் மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், பாடகர் டிகேஸ் நடராஜன், நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, பாடகர் கோமகன் உள்ளிட்டோரின் அடுத்தடுத்த மரணங்கள் திரைத்துறையை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி, தனுஷ் நடிப்பில் சுள்ளான், பரத் நடிப்பில் பிப்ரவரி 14 மற்றும் கில்லாடி உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் காலமானார்.
இதில் கஜினி திரைப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்த திரைப்படம் என்பதும், இதனை அடுத்து இந்தியில் இப்படத்தின் ரீமேக்கில் அமீர் கான் நடித்து அப்படமும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ: வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயார் மரணம்... சிம்புவின் கண்கலங்க வைக்கும் இரங்கல்!