VIDEO: 'விஜய்' பட 'ஹீரோயின்' வெறித்தனம்! .. கை எலும்பு முறிந்த நிலையிலும் 'வாத்தி கம்மிங்' டான்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாய்ஸ் படத்துக்கு பிறகு சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களில் தனக்கே உரிய குறும்பு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதில் இடம் பிடித்தவர் ஜெனிலியா.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் நடித்து வந்த இவர், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து குடும்பம், குழந்தைகள், திரைப்பட விழாக்கள் என முகம் காட்டிவரும் ஜெனிலியா தமது குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டிருந்தபோது அதை வீடியோவாக பதிவு செய்ய நினைத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஸ்கேட்டிங் செய்யும்போது நிலை தடுமாறி கிழே விழுந்துவிட்டார். இதனால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை அறிந்ததும் ரசிர்கள் மிகவும் வருத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் வலியை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஜெனி, அதே சிரிப்புடன், ‘இந்த சக்ஸஸ் ஸ்டோரி இப்போதைக்கு தோல்வி அடைந்துவிட்டது. எனினும் தொடர்ந்து ஸ்கேட்டிங் பண்ணுவேன்’ என அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.

ஆனால் இந்த நிலையிலும் தற்போது விஜயின் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு தம் நண்பர்கள் புடைசூழ குத்தாட்டம் போட்டு ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த நிலையிலும் விஜய் படத்தின் பாடலுக்கு ஆடியுள்ளதை நினைத்து நெகிழ்ச்சி கமெண்ட்டுகளை கூறிவருகின்றனர். விஜயுடன் இணைந்து சச்சின், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் ஜெனிலியா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: வலிமை அப்டேட்டைத் தொடர்ந்து டாக்டர் அப்டேட் கொடுத்த கலெக்டர்! பாராட்டிய சிவகார்த்திகேயன்!

தொடர்புடைய இணைப்புகள்

Genelia dance Vaathi coming Master with injured hand ஜெனிலியா

People looking for online information on Genelia D Souza, Master Tamil, Vaathicoming, Vijay will find this news story useful.