தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Also Read | "என் அப்பா மாதிரி யாருக்கும்".. நிகழ்ச்சியில் Emotional ஆன Viral சிறுமி.. Exclusive!!
'நானே வருவேன்' படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.
இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் தனது கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் "நேனே வஸ்துன்னா" என தலைப்பிட்டுள்ளனர்.
நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த், தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர். சில படங்களில் நடித்தும் உள்ளார். தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்தி சினிமாவிலும் முக்கியமான படங்களை அல்லு அரவிந்த் தயாரித்துள்ளார்.
ஆமிர் கான் நடித்த 'கஜினி', ஷாகித் கபூர் நடித்த 'ஜெர்சி' படங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.
Also Read | PS1 : அப்படி போடு.. அடுத்தடுத்து மாஸ் காட்டிய "குந்தவை" & "ஆதித்த கரிகாலன்" ..