'தல' அஜித்தை, H.வினோத் இயக்கத்தில் உருவான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் கடைசியாக திரையில் பார்த்தோம்.
ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி, நல்ல விமர்சனங்களை பெற்ற ஹிட் படமான பிங்க் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் 'நேர்கொண்ட பார்வை'.
இந்த திரைப்படத்தில் 'தல' அஜித் நடித்ததை அடுத்து, இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், நல்ல மதிப்புகளையும் பெற்றது. இதனை தொடர்ந்து 'தல' அஜித் மற்றும் இயக்குனர் H.வினோத் இணையும் வலிமை திரைப்படத்துக்கான தகவல்கள் வெளியாகிய தொடங்கிய உடனேயே ரசிகர்கள் ஆரவாரத்தில் மூழ்கித் திளைக்க தொடங்கிவிட்டனர்.
தல அஜித்தின் 60-ஆவது திரைப்படமான வலிமை திரைப்படத்தின் அப்டேட்டைப் பெறுவதற்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கின்றனர். போனி கபூரின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இதனிடையே தல அஜித்துடனான பிரபல 'மெட்டி ஒலி' மற்றும் 'ரோஜா' சீரியல் நடிகை காயத்ரியின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆம், சுரேஷ் சந்திர மேனன் இயக்கிய 'பாசமலர்கள்' (1994) திரைப்படத்தில் அரவிந்த்சாமி, ரேவதி உள்ளிட்டோருடன் அஜித்குமார், ரகுவரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்து இருந்தனர்.
இந்த திரைப்படத்தில் தான் காயத்ரி நடித்துள்ளார். அதன் ஷூட்டிங் இடைவேளையில், தல அஜித் மற்றும் ஏனைய நடிகர்கள், படக்குழுவினருடன் காயத்ரி இடம் பெற்றுள்ள இந்த புகைப்படத்தை அவரே தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ALSO READ: 'மகனை பறிகொடுத்த சில நாட்களிலே'.. குடும்பத்தில் நேர்ந்த பேரிழப்பு! சோகத்தில் நடிகை!