மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படம் பற்றியும், நடிகர் விஜய் பற்றியும் மற்றும் பொதுவான பல விஷயங்கள் குறித்தும் பேசினார்.
அதில் கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க மனவலிமை வேண்டும் என்றும், மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான் கடவுள் வரமாட்டார். கொரோனா வந்தால் உறவினர்களே தொட அச்சப்படும் தருணத்தில் நம்மை பாதுகாக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி என தெரிவித்தார். மேலும் இதனைத்தொடர்ந்து மதத்தின் பெயரால் கடவுளை காப்பாற்றுகிறேன் என சொல்பவர்களை நம்பாதீர்கள். கடவுளை கடவுள் காப்பாற்றிக்கொள்வார் யாரும் காப்பாற்ற வேண்டாம் என விஜய் சேதுபதி பேசி இருந்தார்.
இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம், விஜய் பேசுபதியின் பேச்சுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், “மனிதனை நம்ப வேண்டும் என்றதற்கு குட்லக். பல கோடி பேர் மத நம்பிக்கையில் இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நீங்கள் அழிக்க முடியாது.
மனிதன் புறக்கணிக்கலாம், பொய்சொல்லாம். கடவுள் அதை செய்யமாட்டார். ஒரு மனிதன் உங்களை உயர்த்தி பிடிப்பார், அதன் மூலம் வெற்றி வரும் என நினைத்தால் அது பொய். கடவுளால் தான் அது நடந்தது. கடவுளை பின்பற்றாதவர்கள் மனதில் பல அழுக்குகளை வைத்திருப்பார்கள். நான் மனிதனை நம்புவதில்லை கடவுளை தான் நம்புகிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.