கெளதம் வாசுதேவ் மேனன் பிக்பாஸ் உள்ளேயா ?... பிரபல பாடகியின் பதிவால் குஷியான ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்படுவது வழக்கம். விஜே அர்ச்சனாவை தொடர்ந்து  பிக்பாஸ் வீட்டில் அடுத்ததும் ஒரு பெண் பிரபலம் தான் நுழைய இருப்பதாக தகவல்கள் வைரலாகிறது. ஆம் புகழ் பெற்ற பாடகி மற்றும் ஆர்ஜே சுசித்ரா நுழைய உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சுசித்ரா தனது டிவிட்டர் தளத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களிடம் அவர் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். "நாம் அனைவரும் #GVMarmy என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வோம். அவரை சீக்கிரமா பிக்பாஸ் தமிழில் ஒரு போட்டியாளராக பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசை" என்று கூறினார். இந்நிலையில் சுசித்ராவின் பதிவு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. மேலும் கூறுகையில் "நான் எப்போதுமே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் தீவிர ரசிகை. நான் பிக்பாஸ் உள்ளே செல்லாவிட்டாலும், அவர்  செல்ல வேண்டும். அங்கேயும் சிறந்த கண்டென்ட்டுகளை கண்டெடுப்பார்" என்று கூறியுள்ளார்.

கெளதம் வாசுதேவ் மேனன் பிக்பாஸ் உள்ளேயா ?... பிரபல பாடகியின் பதிவால் குஷியான ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gautham vasudev menon as wildcard contestant in biggbossகெளதம் வாசுதேவ் மேனன் பிக்பாஸ் உள்ளேயா

People looking for online information on Gautham Vasudev Menon, Suchitra will find this news story useful.