VTK அதிகாலை FDFS.‌. "ரசிகர்கள் இதை செஞ்சுட்டு படம் பார்க்க வாங்க".. GVM சொன்ன சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் முதல் காட்சி குறித்து கௌதம் மேனன் பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் புதிய படத்துக்கு கைத்தறி Graffiti உடையில் தமன்னா போட்டோஷூட்!

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிகிறார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

வெந்து தணிந்தது காடு படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு திரையிடப்படும் என திரையரங்குகள் அறிவித்துள்ளன.

இது குறித்து (காலை 5 மணி ரசிகர்கள் காட்சி) பேசிய கௌதம் மேனன்,  நீங்கள் காலை 5 மணிக்கு படம் பார்க்க செல்கிறீர்கள் என்றால், ரசிகர்கள் காட்சிக்கு முன் சரியாக வீட்டில் தூங்கிவிட்டு இந்த VTK -ஐப் பார்க்க வாருங்கள். கதை மற்றும் கதாபாத்திரங்களின் தன்மை வியாபிக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும் " என கூறியுள்ளார்.

Also Read | இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு பிடித்த உணவு.. சமைத்து கொடுத்த பிரபல நடிகர்.. வைரல் வீடியோ!

VTK அதிகாலை FDFS.‌. "ரசிகர்கள் இதை செஞ்சுட்டு படம் பார்க்க வாங்க".. GVM சொன்ன சூப்பர் தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gautham Vasudev Menon about Venthu Thaninthathu Kaadu Movie FDFS

People looking for online information on AR Rahman, Gautham Vasudev Menon, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.