தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கெளதம் வாசுதேவ் மேனன். மாதவன், அப்பாஸ், ரீமாசென் உள்ளிட்டோர் நடித்த 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.
Also Read | "தனுஷ் சொன்ன மாதிரி நாங்க Soup Boys .. அவ கூட Life ஃபுல்லா..".. GVM Love ஷேரிங்ஸ்!!
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் உள்ளிட்ட கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான பல திரைப்படங்கள் இன்றளவிலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கக் கூடியவை.
GVM படங்கள் என்று வந்து விட்டாலே, அதில் வரும் காதல் காட்சிகள் பெயர் போனவை. அதே போல, அவரது படத்தில் வரும் பாடல்கள் கூட பலரின் பிளேலிஸ்ட்டை ஆக்கிரமிக்க கூடியவை. மிகவும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் காதல் காட்சிகளை இயக்குவதில் பெயர் போன கெளதம் வாசுதேவ் மேனன், போலீஸ் கதாபாத்திரங்களை மையப்படுத்தியும் திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இதனிடையே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கெளதம். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தும் வரும் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. முற்றிலும் கெளதம் ஸ்டைலில் இல்லாமல், மாறுபட்ட வகையில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. நடிகர் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் ராதிகா, சிதி இட்னானி, நீரஜ் மாதவ், அப்புக்குட்டி, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் ஐம்பது நாட்களை கடந்து பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றிருந்தது. இந்த நிலையில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் Behindwoods சேனலுக்கு தனது ஜீப்பில் பயணம் செய்தபடி பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தனது படத்தில் ஹீரோயின் கால்களை வர்ணிப்பது தொடர்பாக பேசி இருந்த கௌதம் வாசுதேவ் மேனன், "நான் அதை உணர்கிறேன். அதனால் அதை செய்கிறேன் அவ்வளவுதான். நிறைய பேர் அதை விரும்புகிறார்கள். நான் கூட பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். பெண்ணிடம் அழகான ஒரு இடம் என்றால் அது அவரகளின் பாதங்கள் தான். அதை ஏன் நாம் Glorify செய்யக்கூடாது என எனக்கு தோன்றியது.
என்னுடைய படத்தில் வருவதெல்லாம் என்னுடைய வாழ்க்கையின் தருணங்கள் தான். நான் தான் ஜெஸ்ஸி, நான் தான் கார்த்திக். அன்புச்செல்வன்குள்ள இருக்குற ஃபீல்ல நான் இருக்கேன். மாயாவோட பதில்கள்ல நான் இருக்கேன்" என கெளதம் கூறினார்.
அதே போல. தனது படத்தில் அதிகம் போலீஸ் கதாபாத்திரம் வருவது குறித்து பேசி இருந்த GVM, "எனக்கு போலீஸ் கூட எப்பவுமே ஒரு கனெக்ட் இருக்கு. நான் மது அருந்தவோ, புகை பிடிக்கவோ மாட்டேன். நான் வாகனம் ஓட்டி விட்டு செல்லும்போது செக்கிங்கில் இருக்கும் போலீசார், கண்ணாடியை திறந்ததும் நான் இருக்கிறேன் என தெரிந்ததும் என்னை பற்றி விசாரிப்பார்கள். வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, என்னை அறிந்தால் பத்தி, அடுத்தது போலீஸ் படம் எப்ப பண்றீங்கன்னு எல்லாம் கேட்டுட்டு தான் என்னை விடுவாங்க" என்றும் அவர் கூறி இருந்தார்.
Also Read | நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!