"என் அப்பா ஃப்ரண்ட் மாதிரி, பையன் கிரிக்கெட் பிளேயர்".. ஃபேமிலி குறித்து மனம் திறந்த GVM!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கெளதம் வாசுதேவ் மேனன்.

Advertising
>
Advertising

Also Read | "இந்திய சினிமால இப்டி நடந்ததில்ல போல".. 'புஷ்பா 2' படத்துக்காக ரசிகர்கள் செஞ்ச விஷயம்!!

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் உள்ளிட்ட கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான பல திரைப்படங்கள் இன்றளவிலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கக் கூடியவை. GVM படங்கள் என்று வந்து விட்டாலே, அதில் வரும் காதல் காட்சிகள் பெயர் போனவை.

இதனிடையே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கெளதம். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தும் வரும் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. முற்றிலும் கெளதம் ஸ்டைலில் இல்லாமல், மாறுபட்ட வகையில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. நடிகர் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் ராதிகா, சிதி இட்னானி, நீரஜ் மாதவ், அப்புக்குட்டி, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் ஐம்பது நாட்களை கடந்து பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றிருந்தது. இந்த நிலையில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் Behindwoods சேனலுக்கு தனது ஜீப்பில் பயணம் செய்தபடி பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இந்த பேட்டியில் தனது கல்லூரி கால காதல் குறித்தும், தனது படத்தில் வரும் காதல் கதாபாத்திரங்கள், திரைப்படத்தில் அதிகமாக வரும் போலீஸ் கதாபாத்திரங்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருந்தார்.

அதே போல, பயணங்களின் போது அதிகம் இளையராஜா சாரின் பாடல்கள் கேட்பதாக குறிப்பிட்ட கௌதம் வாசுதேவ் மேனன், 'நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி' பாடல் மிகவும் ஃபேவரைட் ஆன ஒன்று என்றும் பலமுறை கேட்டிருப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது போன்ற பல பாடல்கள் ஸ்க்ரிப்ட் எழுத பெரிய அளவில் தனக்கு உதவி செய்ததாகவும் கெளதம் தெரிவித்துள்ளார்.

இது தவிர, தனது குடும்பம் குறித்தும் சில சுவாரஸ்ய தகவலை கெளதம் பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் கெளதமின் மகன் ஆர்யா யோஹன், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஆடியிருந்தார். இது குறித்து பேசிய கெளதம், "அவர் மிகவும் அர்ப்பணிப்பான ஒரு பையன். நிறைய பயிற்சிகளும் நிறைய பணிகளும் அதன் பின்னால் உள்ளது" என தெரிவித்தார்.

பிறகு தனது தந்தையை குறித்தும் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், "என் அப்பா என்னுடன் எப்படி இருந்தாரோ அதே போல தான் எனது பிள்ளைகளிடம் நான் இருக்கிறேன் என எனக்கு தெரிகிறது. அவர் ஒரு ஃப்ரண்ட் மாதிரி என்று தான் சொல்ல வேண்டும். ஸ்ட்ரிக்ட்டான ஒரு சூழல் எங்கள் வீட்டில் இருக்காது. என்ன வேணாலும் செய்யலாம் என்ற நிலை எங்களுக்கு இருந்தது. ஆனால் அதே வேளையில் நாங்களும் அதற்குள் தான் கட்டுப்பட்டு இருந்தோம். ஃப்ரீடம் இருந்தது அதனால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நாங்களும் நினைக்கவில்லை.

எனது அம்மாவும் பள்ளியில் எகானமிக் ஆசிரியராக இருந்தார். அவரை பார்க்கும் போது ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பது போல் தோன்றும். ஆனால் அவர் மிக நட்பாக தான் இருப்பார். அதே போல தான் நானும் எனது பிள்ளைகளுடன் இருக்கிறேன். எனது சகோதரியின் மகன் கூட என்னை அங்கிள் என அழைக்க மாட்டார் கௌதம் என்று தான் அழைப்பார். அதை நான் அதிகம் விரும்பவும் செய்கிறேன்" என கெளதம் மேனன் கூறினார்.

Also Read | "நான் வண்டி ஒட்டிட்டு போறப்போ, Checkingல இருக்குற போலீஸ் வந்து".. GVM பகிர்ந்த சீக்ரெட்ஸ்!!

"என் அப்பா ஃப்ரண்ட் மாதிரி, பையன் கிரிக்கெட் பிளேயர்".. ஃபேமிலி குறித்து மனம் திறந்த GVM!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gautham vasudev menon about his son father and family

People looking for online information on Gautham Vasudev Menon, Gautham vasudev menon about his family will find this news story useful.