'வெந்து தணிந்தது காடு' படத்தில் கமல் நடித்த நாயகன் படத்தின் Reference இடம்பெற்றுள்ளது.
Also Read | VIDEO: விக்ரம் நடிக்கும் "துருவ நட்சத்திரம்".. ரிலீஸ் எப்போ? கௌதம் மேனன் கொடுத்த தெறி அப்டேட்.!
வெந்து தணிந்தது காடு படம் இன்று செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.
வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும்.
வெந்து தணிந்தது காடு படத்தில், மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த 'நாயகன்' படத்தின் Reference இடம்பெற்றுள்ளது. நாயகன் திரைப்படம் இயக்குனர் கௌதம் மேனனுக்கு பிடித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெந்து தணிந்தது காடு படத்தில், நாயகன் திரைப்படத்தில் வரும் டெல்லி கணேஷின் ஐயர் கதாபாத்திரம் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளது. அப்போது பின்னணியில் நாயகன் கமல்ஹாசனின் வேலு நாயக்கரின் புகைப்படம் பின்னணியில் அமைந்துள்ளது. மேலும் வேலு நாயக்கரின் மகள் சாருமதி கதாபாத்திரமும் வெந்து தணிந்தது காடு படத்தில் (துர்காம்மா) ஒரு முக்கிய காட்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
'வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக எழுத்தாளராக இணைந்துள்ளார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Also Read | சிம்பு நடிக்கும் 'பத்து தல'.. படத்தில் வில்லனாக பிரபல முன்னணி இயக்குனரா? சூப்பர் COMBO-ல இது!