மாஸ்.. கௌதம் மேனன் இயக்கும் அடுத்த ஹீரோ இவர்தான்.!! OFFICIAL அப்டேட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வித்தியாசமான கதைக்களத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர் ராம் பொத்தினேனி அடுத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் தன்னுடைய புதிய படத்திற்காக இணைகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "வேட்டையாடு விளையாடுல இந்த ஆக்ஷன் சீன் Direct பண்ணது இந்த இயக்குநரா??" - GVM

இது தொடர்பாக தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ராம் பொத்தினேனியுடன் புதிய படம் ஒன்றிற்காக அடுத்த வருடம் இணைய இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக்களமாகவும் இது இருக்கும் என்பதையும் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தனக்கும் ராம் பொத்தினேனிக்கும் ஒரு பொது நண்பராக நீண்ட காலமாக இருந்து வருவதையும் கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரமான கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட ‘வெந்து தணிந்தது காடு’ (தெலுங்கில் ‘தி லைஃப் ஆஃப் முத்து) தெலுங்கில் ஸ்ரவந்தி மூவிஸ்ஸின் ஸ்ரவந்தி ரவி கிஷோரால் வெளியிடப்படுகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே பொதுவாக ஸ்டைலிஷ், மாடர்ன் த்ரில்லர் கதைகளே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தீவிரமான ஆக்‌ஷன் கதைக்களத்தை சிம்புவுடன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கொடுத்து இருக்கிறார்.

சமீபமாக, ராம் பொத்தினேனியும் வழக்கமான மாஸ் ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து விலகி வருகிறார். இந்த நிலையில், கெளதம் மேனன் – ராம் பொத்தினேனி கூட்டணியில் கதைக்களம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

ராமின் அடுத்த படமான #BoyapatiRapo –ன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. அது குறித்தான விவரம் அடுத்தடுத்து வெளியிடப்படும். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் படத்தில் ராம் பொத்தினேனி நீடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | VIDEO: விக்ரம் நடிக்கும் "துருவ நட்சத்திரம்".. ரிலீஸ் எப்போ? கௌதம் மேனன் கொடுத்த தெறி அப்டேட்.!

தொடர்புடைய இணைப்புகள்

Gautham Menon  join hands with Ram Pothineni next film

People looking for online information on Ram Pothineni, Silambarasan TR, Simbu, Str, The Warrior, Vendhu Thanindhathu Kaadu, VTK will find this news story useful.