இயக்குனர் கௌதம் மேனன் - விக்ரம் சந்திப்பு..மீண்டும் துவங்கும் "துருவ நட்சத்திரம்"?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் விக்ரமை சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | "ஒத்த செருப்புக்கு பிறகு ஒத்த ஷாட்!" - பார்த்திபனின் இரவு நிழல்.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு.!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. நீண்ட நாட்களாக உருவாகி வரும் இந்த படம் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். தாமரை எழுதிய 'ஒரு மனம்' என்ற சிங்கிள் பாடலை கார்த்திக் மற்றும் ஷாஷா  இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்திற்கு தற்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் & இயக்குனர் கௌதம் மேனன் சந்தித்து படத்தின் அடுத்த கட்ட வேலைகள் மற்றும் பின் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்து உள்ளனர். இந்த புகைப்படங்களை கௌதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "நட்சத்திரங்கள் வரிசைப்படுத்தப்படுகினறன" என தலைப்பிட்டு இந்த புகைப்படங்களை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதேபோல் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கப்போகும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "ஒரு சின்ன பிரேக் .." லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த ட்வீட்.. உச்சகட்ட ஆவலுடன் Waiting'ல் ரசிகர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Gautham menon Chiyaan vikram Meeting Dhuruva Natchathiram

People looking for online information on Chiyaan Vikram, Dhuruva Natchathiram, Gautham Menon, Vikram will find this news story useful.