தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட், ஒன்றாக எண்டர்டெயின்மென்ட், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் பேனரில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தர்புக சிவா இசையமைக்க ஜோமோன் டி.ஜான், மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்து பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
முதன் முறையாக இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், சில காரணங்களால் திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் நீடித்து வந்தது. தற்போது இப்படத்தின் சிக்கல் தீர்க்கப்பட்டு திரைப்படம் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக எதிர்ப்பார்ப்பை கூடுதலாக்கி வைத்திருந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வின் FDFS காட்சியை பார்த்த ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில், சென்னை பாக்ஸ் ஆபீஸில் முதல் நாள் வசூலாக ரூ.74.28 லட்சம் குவித்துள்ளது. இந்த வார இறுதியில் மேலும் வசூல் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.