மஞ்சிமா மோகன் பிறந்தநாள்.. ஸ்வீட்டான சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய கௌதம் கார்த்திக்! CUTE வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | வெற்றிமாறன் இயக்கும் விடுதலை.. ஐரோப்பா & UK உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

கடந்தாண்டு நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த ஆண்டு நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது.  நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் இருவரும் ஜோடியாக பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் கௌதம் கார்த்திக்குடன் வேடந்தாங்கல் அருகில் உள்ள பிரபல தோட்டத்திற்கு சென்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த பதிவில், "என் பிறந்தநாளைக் கொண்டாடுவது எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். இந்த அற்புதமான இடத்திற்கு இவ்வளவு அழகான பயணத்தைத் திட்டமிட்டதற்கு நன்றி.
சிறந்த பிறந்தநாள் ஆச்சரியம் ❤" என மஞ்சிமா மோகன் பதிவிட்டுள்ளார்.

நாளை (11.03 .2023) மஞ்சிமா மோகன் தனது 30வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

Also Read | பிரபல டிரெண்டிங் பாட்டுக்கு டான்ஸ் ஆடி அசத்திய அதிதி ஷங்கர்.. சும்மா வேறலெவல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Gautham Karthik Celebrate Manjima Mohan Birthday in Suzo Farms

People looking for online information on Gautham Karthik, Manjima Mohan will find this news story useful.