"அண்ணன் சிம்பு"..'பத்து தல' படத்தின் BTS போட்டோவை பகிர்ந்து கௌதம் கார்த்திக் உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் புதிய BTE புகைப்படத்தை நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | Thunivu : 'துணிவு' அடுத்த கட்ட பணியில் நடிகர் அஜித்.. மஞ்சு வாரியர் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது.  இந்த படத்தின் 5ஆம் கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு  கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்தது.  இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு ஐத்ராபாத் நகரில் நடந்து வருகிறது.

'பத்து தல' திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக், தனது டிவிட்டர் பக்கத்தில் சிம்புவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "என் வாழ்நாளில் இதைவிட உண்மையான மனிதரை நான் சந்தித்ததில்லை. அவரது கிராஃப்ட்டுக்கு  உண்மையாக இருக்கிறார்.

வேலையில் சுவாரஸ்யமாக படைப்பாற்றலுடன் உள்ளார். மிக முக்கியமாக, அவர் உண்மையிலேயே எப்படி உணருகிறார் என்பதைக் வெளிக்காட்ட பயப்படுவதில்லை.
உங்களுடன் வேலை பார்த்தது உண்மையிலேயே  மகிழ்ச்சி சிலம்பரசன் அண்ணன்" என கௌதம் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.

 

Also Read | கோமாளி பட இயக்குனரின் 'லவ் டுடே'.. டைட்டில் கார்டில் தளபதி விஜயை கௌரவித்த படக்குழு..😍

தொடர்புடைய இணைப்புகள்

Gautam Karthik with Silambarasan TR Pathu Thala Movie BTS

People looking for online information on Gautham Karthik, Pathu Thala, Pathu Thala Movie BTS, Silambarasan TR will find this news story useful.