தனது அம்மாவுடன் கௌதம் கார்த்திக்.. வைரலாகும் நடிகை ராகினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

Advertising
>
Advertising

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது.  நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன. மேலும் தற்போது திருமண புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் கௌதம் கார்த்திக் தனது அம்மாவும் நடிகையுமான ராகினியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களாக இவை அமைந்துள்ளன.

நடிகை ராகினி 1988 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சோலைக்குயில் படத்தில் கார்த்தி & ராகினி இணைந்து நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Gautam Karthik with his mother Ragini photos Went Viral

People looking for online information on Gautham Karthik, Manjima Mohan, Ragini will find this news story useful.