கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
Also Read | மெக்காவுக்கு புனித பயணம் செய்த ஷாருக்கான்.. இஹ்ராம் அணிந்து பிரார்த்தனை! வைரல் போட்டோஸ்
கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன.
இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் இணைந்து திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக தங்களது வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழையும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த தருணங்களை புகைப்படங்களாக மஞ்சிமா மோகன் பகிர்ந்துள்ளார். இதில் தாலி கட்டிய பின்னர் மணமகள் மஞ்சிமாவை கௌதம் கார்த்திக் ஆரத்தழுவி இருக்கும் புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Also Read | விஜய் சேதுபதியின் DSP படத்தில் நடிகர் விமல்.. தியேட்டரில் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்!