'வலிமை' படத்துடன் மோதும் 'RRR' புகழ் ஆலியா பட் நடித்த புதிய படம்! வெளியான கலர் ஃபுல் டிரெய்லர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: வலிமை படத்துடன் மோதும் ஆலியா பட்டின் புதிய படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

முதல்முறையாக தியேட்டரில் வெளியான சூரரைப் போற்று! திருவிழா கொண்டாட்டமாக்கிய ரசிகர்கள்

RRR படத்திற்கு பின் இந்த படத்தில் ஆலியா பட் நடித்துள்ளார். கங்குபாய் கதியாவாடி என இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார். பயோகிராபி கிரைம் டிராமாவாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் ஹுசைன் ஜைதியின் "மும்பையின் மாஃபியா குயின்ஸ்" என்ற புத்தகத்தின் ஒரு அத்தியாயத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

கதியாவாட்டின் எளிய பெண்ணான கங்கா ஹர்ஜிவந்தஸ், காமாதிபுராவின் சிவப்பு விளக்குப் பகுதியில் மிகப்பெரிய டானாக  கங்குபாய் எப்படி மாறுகிறாள் என்பதே படத்தின் கதை. 'கங்குபாய் கோதேவாலி என்ற இளம்பெண்ணை விபச்சாரத்திற்கு விற்பது முதல் பின் அவள் எப்படி காமாதிபுராவில் உள்ள ஒரு விபச்சார விடுதியின் மேடமாக மாறுகிறாள் என்பது வரை' படம் பேச உள்ளது.

இந்த படம் முதலில் 11 செப்டம்பர் 2020 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, பின்னர் 30 ஜூலை 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது, அதன் பிறகு இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கங்குபாய் கத்தியவாடி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 6 ஜனவரி 2022 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் S. S. ராஜமௌலியின் இயக்கத்தில் அலியா பட நடித்துள்ள RRR படத்துடன் மோதலைத் தவிர்க்க, வெளியீடு பிப்ரவரி 18க்கு மாற்றப்பட்டது. இப்படம் இறுதியாக 2022 பிப்ரவரி 10 முதல் 20 வரை நடைபெறவிருக்கும் 72வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் வெளியீடு பிப்ரவரி 18ல் இருந்து ஒரு வாரம் தள்ளி 25 பிப்ரவரி 2022 அன்று இந்தியிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு ஒரு நாள் முன்பாக அஜித்தின் வலிமை படம் தமிழ், தெலுங்கு,இந்தி, கன்னடத்தில் பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளது.

இந்த கங்குபாய் கதியாவாடி படத்தில் சாந்தனு மகேஸ்வரி, விஜய் ராஸ், சீமா பார்கவா பஹ்வா, இந்திரா திவாரி மற்றும் வருண் கபூர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர், அஜய் தேவ்கன், ஹுமா குரேஷி மற்றும் இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் சிறப்பு கேமியோக்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. வண்ணமயமான ஒளிப்பதிவில், சஞ்சய் லீலா பன்சாலி படங்களுக்கே உரித்தான லுக்கில் டிரெய்லர் அமைந்துள்ளது. வண்ணமயமான டிரெய்லர் சில மணிநேரங்களில் ரசிகர்களை கவர்ந்து 20 லஸ்டம் பார்வையாளர்களை தற்போது வரை தொட்டுள்ளது.

அடடே.. தமிழை விட தெலுங்கில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆன விஷால் படம்! செம

'வலிமை' படத்துடன் மோதும் 'RRR' புகழ் ஆலியா பட் நடித்த புதிய படம்! வெளியான கலர் ஃபுல் டிரெய்லர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gangubai kathiawadi Alia Bhatt Movie Trailer Released

People looking for online information on Ajith Kumar, Alia Bhatt, Gangubai Kathiawadi, Power, RRR, Sanjay leela bhansali, Valimai, Valimai The Power will find this news story useful.