விஜய் நடிக்கும் 'வாரிசு'.. படத்துல S.J. சூர்யா ROLE இதான்.. மனம் திறந்த பிரபல நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா Role  குறித்த  Exclusive தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இந்தியன் 2 படப்பிடிப்பில் கருணாநிதியை நினைவுகூர்ந்து ட்வீட் செய்த கமல்.. வைரல் ஃபோட்டோ!

தற்போது 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின. இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வாரிசு படத்தின் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் "நடிகர் எஸ்‌. ஜே. சூர்யா, இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்" என கணேஷ் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

Also Read | வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போ? செம்ம அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

விஜய் நடிக்கும் 'வாரிசு'.. படத்துல S.J. சூர்யா ROLE இதான்.. மனம் திறந்த பிரபல நடிகர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ganesh Venkatraman about Varisu Movie Sj Suryah Role

People looking for online information on Ganesh Venkatraman, Sj suryah, Varisu, Vijay will find this news story useful.