தீபாவளியை முன்னிட்டு எவிக்ஷன் இல்லை என முன்னரே பிக்பாஸ் அறிவித்து விட்டதால், இந்த வாரம் ரொம்ப போராக இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அதை நிரூபிப்பது போல நேற்றைய நிகழ்ச்சி ரொம்ப சுமாராக இருந்தது. (கமல் சார் சேரோட வந்தப்பவே சுதாரிச்சு இருக்கணும்) நல்ல நாளும் அதுவுமா இருக்கிற சந்தோஷத்தை எதுக்கு கெடுக்கணும் என கமலும் அமைதியாகவே நிகழ்ச்சியை கொண்டு சென்றார்.
இதில் பட்டாசு டாஸ்க்கின் போது ஒருவருக்கு ஒரு பட்டாசு மட்டுமே என்பதால் பெரிதாக பிரச்சினை எழவில்லை. ஆனால் பாம்பு மாத்திரையை கையில் எடுத்த கேப்ரியலா அதை பொசுக்கென சுச்சிக்கு கொடுத்து விட்டார். மற்ற போட்டியாளர்கள் எடுக்கும்போது பிறரிடம் ஓரளவு கேட்டே கொடுத்தனர். (இந்த விஷயத்தில் சுச்சியை கமல் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது) ஆனால் கேப்ரியலா எடுத்த எடுப்பிலேயே கொடுத்து விட்டு சென்று விட்டார்.