'குரூப்ல' இருந்துட்டே இப்படி செஞ்சுட்டாங்க... 'வேல்' பிரதர்ஸ் உடையுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று முன்தினம் பாடகி சுசித்ரா வீட்டைவிட்டு வெளியேறியபோது வேல் பிரதர்ஸ் என்னும் பெயரில் குரூப் ஒன்று உள்ளே இருப்பதாக சொல்லி சென்றார். அதில் அர்ச்சனா, சோம், நிஷா, ரியோ, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் இருக்கின்றனர். அதேபோல கேப்ரியலா அந்த குரூப் உள்ளே வருவதும், போவதுமாக இருக்கிறார் என சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நாமினேஷனில் கேப்ரியலா, ஜித்தன் ரமேஷை நாமினேட் செய்தார். இதேபோல டாப்பிள் கார்டு விவாதத்தின் போது சோம், அர்ச்சனாவை நாமினேட் செய்ய அதை அகம் டிவி வழியாக அர்ச்சனா பார்த்து கொண்டிருந்தார். அவரது அணியில் இருந்தே இரண்டு பேர் அர்ச்சனா மற்றும் ஜித்தன் ரமேஷை நாமினேட் செய்து இருக்கின்றனர்.

என்றாலும் அர்ச்சனா இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெறவில்லை. ஆனால் ரமேஷ் இடம்பெற்று இருக்கிறார். கேப்ரியலா நாமினேட் செய்தது ரமேஷ்க்கு தெரியாது. என்றாலும் சோம் நாமினேட் செய்ததை அர்ச்சனா பார்த்து விட்டதால் வரும் நாட்களில் வேல் பிரதர்ஸ் அணி உடையுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும் சோமுக்கு இனி அந்த அணியில் இருந்து ஆதரவு கிடைக்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். 

தொடர்புடைய இணைப்புகள்

Gabriella and Somasekhar Nominates Archana for Eviction

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.