சுதா கொங்கரா இயக்கத்தில் கேஜிஎஃப் நிறுவனமான ஹோம்பாலே நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
Also Read | Oh My Dog: “சார் நானே உங்க fanboy தான்”… ஜாண்ட்டி ரோட்ஸ் tweet-க்கு சூர்யா நெகிழ்ச்சி!
கேஜிஎஃப் படங்களின் இமாலய வெற்றி…
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது. இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த படம் நான்கு நாட்களில் 546 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 1000 கோடி வசூல் மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎஃப் 1 & 2 படங்களின் மூலம் ஹோம்பாலே நிறுவனம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட தயாரிப்பு நிறுவனமாகியுள்ளது..
Homebale films-ன் அடுத்தடுத்த படங்கள்….
KGF 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்த படமும் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இதையடுத்து தற்போது அந்த நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்க ’இறுதிச் சுற்று’ மற்றும் ’சூரரைப் போற்று’ திரைப்படங்களின் இயக்குனர் சுதா கொங்கரா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதுபற்றிய அறிவிப்பில் “சில உண்மைக் கதைகள் சரியாகச் சொல்லுவதற்கும் தகுதியானவை. ஹோம்பலே பிலிம்ஸ், இயக்குனர் சுதா கொங்கராவுடன் இணைந்து அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் எல்லாப் படங்களிலும் இருப்பதைப் போலவே இந்தியாவின் கற்பனையை நாம் கைப்பற்றும் ஒரு கதை இது" என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலானது. ஆனால் இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் அந்த அறிவிப்பில் வெளியாகவில்லை.
ஜி வி பிரகாஷ் கொடுத்த Expectation…
இந்நிலையில் தற்போது அந்த அறிவிப்பை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ். ஏற்கனவே இந்த படத்தின் கதாநாயகன் யார்? இசையமைப்பாளர்? என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை இந்த பதிவு மேலும் அதிகரித்துள்ளது. சுதா கொங்கராவின் ஹிட் படமான ’சூரரைப் போற்று’ படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ்தான் பணியாற்றி இருந்தார். அதனால் இந்த படத்துக்கும் அவரே இசையமைப்பாளராக பணியாற்றுவார் என்று ரசிகர்களின் நம்பிக்கை அதிகமாகியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8