‘செல்ஃபி’-க்குப் பின் மீண்டும் இணையும் ஜி வி பிரகாஷ் & கௌதம் மேனன்… வெளியான செம்ம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் இருவரும் ‘செல்ஃபி’ திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர்.

G V prakash and Gautham menon new movie after selfie
Advertising
>
Advertising

செல்ஃபி…

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்குமார், வர்ஷா பொல்லம்மா மற்றும் கௌதம் மேனன் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் செல்ஃபி. டி ஜி பிலிம் கம்பெனி மூலமாக சபரிஷ் என்பவர் தயாரித்த இந்த படத்தில் முக்கிய வேடங்களில் வித்யா பிரதீப், சங்கிலி முருகன், டி.ஜி.குணாநிதி, வாகை சந்திரசேகர், சுப்பிரமணியம் சிவா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்த செல்ஃபி திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட்டார். இந்த திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. பின்னர் ஆஹா தமிழ் ஓடிடியில் இந்த திரைப்படம் வெளியானது.

G V prakash and Gautham menon new movie after selfie

கதைக்களம்…

கனல் (ஜி.வி. பிரகாஷ்) ஒரு பொறியியல் மாணவர், அவர் தனது தந்தையால் ஒரு பிரபலமற்ற கல்லூரியில் கட்டாயமாக சேர்த்துவிடப் படுகிறார். கமிஷனுக்கான மாணவர்களுக்கு சீட் பிடித்துக் கொடுத்தால் விரைவாக பணக்காரர் ஆகிவிடலாம் என்று தெரிந்துகொள்ளும் கனல் அந்த வழியில் செல்கிறான். அவர் அதே வேகத்தில் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்கிரார். இந்த பிரச்சனையில் அவரின் சிறந்த நண்பர் ஒருவரையும் இழக்கிறார். இந்த பிரச்சனைகளில் இருந்து அவர் எப்படி வெளியேறுகிறார் என்பதை விறுவிறுப்பாக சொன்னது செல்ஃபி திரைப்படம். இதில் கௌதம் மேனன் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் இணையும் கூட்டணி…

இந்நிலையில் செல்ஃபி படத்துக்குப் பிறகு வெற்றிக்கூட்டணியான ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். இந்த படத்தில் முதல் லுக் மற்றும் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது. இந்த புதிய திரைப்படத்தை மெட்ராஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் விவேக் இயக்குகிறார். இது சம்மந்தமான போஸ்டர் தற்போது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

G V prakash and Gautham menon new movie after selfie

People looking for online information on G V Prakash Kumar, Gautham Menon, Selfie will find this news story useful.