பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது பிக்பாஸே மிகவும் விரும்பி விளையாடும் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்துவருகிறது.

இதில் பாவனி ஹேர் டிரையரை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது அவருக்கு ஃப்ரீஸ் சொன்னார் பிக்பாஸ். அப்போது பாவனியை தொந்தரவு செய்ய வந்த வருண், இவர்களின் அருகே வந்த அக்ஷரா, அந்த பக்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரியங்கா, பிக்பாஸ் ஃப்ரீஸ் சொல்வதற்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும் என்று நினைத்த ராஜூ அனைவருக்குமே அடுத்தடுத்து ஃப்ரீஸ் சொல்லப்பட்டது.
அப்போது நிரூப் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எப்படியும் பிக்பாஸ் நமக்கும் ஃப்ரீஸ்தான் சொல்லுவார் என்று நினைத்து நிரூப், வேக வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் பிக்பாஸ் வைத்ததுதான் செம்ம ட்விஸ்ட். ஆம், நிரூப்புக்கு ஃப்ரீஸ் சொல்லாமல் பிக்பாஸ் கொஞ்சம் தன் பாணியை மாற்றி, லூப் சொல்லிவிட்டார்.
இதனால் பிக்பாஸின் ஃப்ரீஸ் அலை நம்மை நோக்கி வருகிறதா? என திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவசர அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த நிரூப், தொடர்ந்து திரும்பிப் பார்த்ததும் சாப்பிட போவதுமாக அதையே ரிப்பீட் மோடில் லூப்பில் போட்டதுபோல் செய்யத் தொடங்கிவிட்டார். அதை பார்த்து பிரியங்கா, தான் ஃப்ரீஸ் ஆகி இருந்த நிலையிலும், கூட விழுந்து விழுந்து சிரிக்க முயற்சித்தார்.
இப்படி பிக்பாஸ் வீட்டுக்குள் அனைவரையும் ஃப்ரீஸ் ஆகவைத்தால், போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்கள் யாரோ, வீட்டுக்குள் வரப் போகிறார்கள் என அர்த்தம். இதனாலேயே பிக்பாஸ் போட்டியாளர்கள் பிக்பாஸ் ஃப்ரீஸ் சொல்லும்போதே தங்கள் வீட்டினரை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.
அந்த வகையில் அக்ஷரா, சிபி, ராஜூ, நிரூப், பாவனி, வருண் உள்ளிட்டோரின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அனைவரையும் பார்த்துவிட்டு சென்றனர்.