"நான்தாங்க பாலிவுட் நடிகர்.." - பேட்டியாளரிடம் நினைவூட்டிய ரன்வீர்..! சுவாரஸ்ய பின்னணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரன்வீர் சிங். பத்மாவத், ராம்லீலா, கல்லி பாய், 83 உள்ளிட்ட ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பல படங்கள், ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டிலும் உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. அமெரிக்கா & கனடா தியேட்டர் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

இதற்கடுத்தும் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ரன்வீர் சிங், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

ரன்வீர் சிங் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது போல, அவர் வித்தியாச வித்தியாசமாக அணியும் உடையும் அதிக கவனம் பெறும். நிறைய வண்ணமயமான உடைகளை வித்தியாசமான முறையில் அணிந்து அது தொடர்பான புகைப்படங்களையும் ரன்வீர் சிங் பகிர்வார். இது போன்ற உடைகளை அணிந்து அவர் தோன்றினாலே இணையத்தில் அது தான் அன்றைக்கு பேசு பொருளாக மாறும்.

இந்த நிலையில், கார் பந்தயம் ஒன்றை பார்க்க சென்றிருந்த ரன்வீர் சிங் தொடர்பான வீடியோ ஒன்று அதிகம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதற்கான காரணமும் அதிக கவனம் பெற்று வருகிறது.

அபுதாபியில் நடைபெற்ற ஃபார்முலா கார் பந்தய நிகழ்ச்சி ஒன்றை காண சமீபத்தில் சென்றிருந்தார் ரன்வீர் சிங். அப்போது அவரை முன்னாள் ஃபார்முலா ஒன் ரேஸர் மார்ட்டின் ப்ரண்டில் நேர்காணல் செய்தார். நேர்காணலின் போது ரன்வீர் சிங் யார் என்பதை மறந்த மார்ட்டின், நீங்கள் யார் என்பதை மறந்து விட்டதாக கூறி அறிமுகம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்.

இதற்கு பதில் சொன்ன ரன்வீர் சிங், "நான் ஒரு பாலிவுட் நடிகர். இந்தியாவின் மும்பையை சேர்ந்தவன். நான் ஒரு எண்டர்டெயினர்" என சிரித்துக் கொண்டே பதிலளித்தார். தான் நடிகர் என்பதை முன்னாள் கார் பந்தய வீரர் மறந்த போதும் சிரித்துக் கொண்டே ரன்வீர் பதில் சொன்ன விதம், அதிகம் ட்ரெண்ட்டிங் ஆகி வருகிறது.

Also Read | Chris Hemsworth: நோய் பாதிப்பால் நடிப்புக்கு தற்காலிக ஓய்வு .. பிரபல Thor பட நடிகர்?

தொடர்புடைய இணைப்புகள்

Former f1 racer fails to identify ranveer singh his response viral

People looking for online information on F1 Racer, Ranveer Singh will find this news story useful.