VANITHA VS JULIE: முதல் முறை விஸ்வரூபம் எடுக்கும் வனிதா - ஜூலி பிரச்சனை.. தொண்டை கிழிய சண்டை BBULTIMATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vanitha Julie Heated argument : டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி.

Advertising
>
Advertising

பிக்பாஸ் அல்டிமேட்

24 மணி நேரமும் போட்டியாளர்களின் செயல்பாடுகள், அவர்களின் பேச்சுகள்  அனைத்தும் காட்டப்பட்டு வரும் நிலையில், போட்டியாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read: "100 நாளும் தூண்டிவிட்டு பரபரப்பை உருவாக்குவாங்க".. BiggBoss முன்னாள் போட்டியாளர் பரபரப்பு பேச்சு!

இதில் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் திருடர்கள் உடைகக்த் தொடங்கியதால் கடுப்பாகி அனைவரையும் துரத்திய வனிதா, அவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை உடைத்தபோது, டென்ஷனாகி, பிக்பாஸிடம் “பிக்பாஸ் என்ன இது? எல்லாத்தையும் உடைக்குறாங்க?” என ஆவேசமாக கேட்டார்.

வீட்டையே ஒடைச்சிருவேன்

தொடர்ந்து வனிதா,  தன்னுடைய பொருட்களையும் திருடர்கள் உடைப்பதால் ஆவேசமாகி, கேமில் இருந்து விலகுவதாக தெரிவித்து, டாஸ்கில் இருந்து வாக் அவுட் கொடுத்தார். அதன் பொருட்டு தனது போலீஸ் யுனிஃபார்மை சென்று கழட்டிவிட்டு வந்த வனிதா, “என்னோட பொருளையா உடைக்கிறீங்க? கை வைங்க.. வீட்டையே ஒடைச்சிருவேன்!” என பேசிக்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜூலியின் செய்கைகளால் வனிதா அதிருப்தி ஆகி வந்தார். முன்னதாக ஜூலி தமது விலையுயர்ந்த செண்ட் பாட்டிலை எடுத்து டாய்லெட்டுக்குள் போட்டுவிட்டதற்காக ஜூலியை வனிதா கடிந்துகொண்டார். 

ஜூலி போலீஸாக..

இந்நிலையில் தான், ஜூலிக்கும் வனிதாவுக்குமான அடுத்த சண்டை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இம்முறை ஜூலி போலீஸாகவும், மற்றவர்கள் திருடர்களாகவும் இருக்க, முக்கியமான ரிங்கை தான் போட்டியாளர்கள் திருட வேண்டும். ஆனால் அது திருடு போக கூடாது என சொல்லி அங்கேயே ஜூலி உட்கார்ந்திருக்க, அப்போது வந்த வனிதா ஆவேசமாக பேச ஆரம்பித்தார்.

டிராமா கம்பெனி பண்ணாதா.. மூடிட்டு போ ஜூலி..

அதில், “எப்படி எடுத்தியோ, அப்படியே வை.. இந்த டிராமா கம்பெனிலாம் பண்ணினா, எல்லாத்தையும் உடைச்சுடுவேன் வீட்ல” என வனிதா சொல்கிறார். இந்த சண்டையில், ஜூலி கையில் இருந்து அந்த ரிங்கை இழுக்க, அதற்கு ஆவேசமாக வனிதாவை பார்த்து , ஜூலி தொண்டை கிழிய கத்துகிறார். வனிதாவும் பதிலுக்கும், “ஜூலி மூடிட்டு போ.. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத” என சொல்ல, பதிலுக்கு ஜூலி, “நான் அழவே இல்ல.. என் கண்ண பாருங்க.” என சொல்லி வனிதாவுக்கு டோஸ் கொடுக்கிறார்.

இந்த ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், ஆஹா ஜூலி - வனிதா சண்டை ஆரம்பிச்சிடுச்சு.. இனி பிக்பாஸ்ல புயல் அடிக்க போகுது என கூறி வருகின்றனர்.

Also Read: ஜெயம் ரவியா இது? முதல் முறை Salt & pepper லுக்கில் தீயாய் பரவும் ஃபோட்டோ.. அடுத்த படத்துல இதுதான் கெட்டப்பா?

தொடர்புடைய இணைப்புகள்

First ever Vanitha Julie Heated argument Bigg Boss Ultimate Tamil

People looking for online information on BBUltimate, Bigg Boss Ultimate, Julie, Vanitha Vijayakumar will find this news story useful.