BB6 TAMIL : ஜிபி முத்துவா? ஜனனியா?.. பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் யார்?.. 'திக்திக்' டாஸ்க்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் யார் என்பது பற்றிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

first captain task in biggboss 6 tamil gp muthu and janani
Advertising
>
Advertising

கடந்த ஒரு வாரம் முன்பு தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன், அடுத்தடுத்து பல சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ட்விஸ்ட், பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டே இருப்பதால், போட்டியாளர்களும் இதனை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் காரணமாக, பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட எப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. இதற்கு மத்தியில், வார இறுதியில் போட்டியாளர்களிடம் கமல் பேசும் எபிசோடுகளும் அரங்கேறும். அந்த வகையில், சமீபத்தில் போட்டியாளர்களுடன் கமல் கலந்துரையாடும் விஷயங்கள், பெரிய அளவில் சுவாரஸ்யத்தையும் உண்டு பண்ணி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, தற்போது ஆறாவது பிக்பாஸ் சீசனின் முதல் நாமினேஷன் குறித்த ப்ரோமோவும் வெளியாகி, முதல் வார நாமினேஷன் பட்டியலில் யார் யார் எல்லாம் இடம்பெற்றிருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கான ஆவலையும் ரசிகர்கள் மத்தியில் உண்டு பண்ணி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் யார் என்பதை அறிந்து கொள்வதற்கான ப்ரோமோவும் வெளியிடப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனுக்கான டாஸ்க்கில் சாந்தி, ஜிபி முத்து மற்றும் ஜனனி ஆகியோர் களமிறங்கி உள்ளது தெரிய வருகிறது.

கைப்பிடிகள் கொண்ட கடிகாரம் ஒன்று வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி வரை எந்த போட்டியாளர் கீழே விழாமலோ அல்லது இறங்காமலோ அதனை பிடித்தபடி இருக்கிறாரோ அவரே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் என்றும் அறிவிக்கப்படுகிறது. முதல் ஆளாக சாந்தி கீழே இறங்க, ஜிபி முத்து மற்றும் ஜனனி ஆகியோர், தாக்குப்பிடித்த படி நிற்கும் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளது.

இறுதியில், இந்த போட்டியில் கடைசியில் வெற்றி பெற்ற ஜிபி முத்து, ஆறாவது பிக்பாஸ் சீசனின் முதல் கேப்டனாகவும் தேர்வாகி உள்ளதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

First captain task in biggboss 6 tamil gp muthu and janani

People looking for online information on BB6 Tamil, Biggboss 6 Tamil, GP MUTHU, Janani will find this news story useful.