ரன்பீர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்து..? முழு விபரம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிக்கும் புதிய படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தளத்தில் நேற்று தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Fire accident on Ranbir Kapoor And Shraddha Kapoor shoot
Advertising
>
Advertising

விபத்து

இயக்குனர் லவ் ரஞ்சனின் இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் இணைந்து நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று துரதிருஷ்டவசமாக இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால், படப்பிடிப்பு தளம் மோசமாக சேதமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Fire accident on Ranbir Kapoor And Shraddha Kapoor shoot

இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்திருக்கிறது. இதனிடையே தேசிய பேரிடர் ஆணையம் வெளியிட்ட எச்சரிக்கையை தொடர்ந்து மும்பை தீயணைப்புப் படை மற்றும் பிற மீட்பு அமைப்புகள் சுமார் 10 தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்க விரைந்தன. நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இரவு 10.30 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குளிரூட்டும் பணிகள் நடைபெற்றது.

இதனிடையே, இந்த தீ விபத்தில் சிக்கிய தொழிலாளி ஒருவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு கூப்பர் மருத்துவனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

வரும், 2023ம் ஆண்டு மார்ச் 8ந்தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. காமெடி மற்றும் காதல் கலந்த இந்த படத்தில் போனி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Fire accident on Ranbir Kapoor And Shraddha Kapoor shoot

People looking for online information on தீவிபத்து, ரன்பீர்கபூர், ஷ்ரத்தாகபூர், FireAccident, Kapoor, Ranbir, Shooting, Shraddha Kapoor will find this news story useful.