விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது semi-finals முடிந்துள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது. ஏனென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் கவலைகளை மறந்து சிரிக்க இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அருமருந்தாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். எனவே இன்னும் சில எக்ஸ்ட்ரா வாரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் கூட நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அதேபோல் சீக்கிரமே வைல்டு கார்டு சுற்று நடைபெற இருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள போட்டியில் இந்த வாரம் கனி, பாபா பாஸ்கர், ஷகிலா அஸ்வின் ஆகியோர் செமி பைனல்ஸ் சுற்றை எட்டியிருந்தனர். இந்நிலையில் கனி மற்றும் அஸ்வின் இருவரும் நேரடியாக பைனலுக்கு முன்னேறியுள்ளனர். அதன்பிறகு பாபா பாஸ்கர் மாஸ்டருக்கு முகமே வாடிவிட்டது. அதன்பிறகு பாபா பாஸ்கர் மற்றும் ஷகிலா இருவருக்கும் இடையே நடந்த போட்டியில் நூலிழையில் வெற்றி பெற்று பாபா பாஸ்கர் பைனலுக்கு முன்னேறினார். அப்படி கடைசியில் நடந்த இந்த ட்விஸ்ட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் வரும் வாரத்தில் ஷகீலா வைல்டு கார்டு போட்டியாளர்களுடன் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.