இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் இன்று மரணம் அடைந்துள்ளதை அடுத்து அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி கூறியுள்ள இயக்குநர் அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீ, “இதை ஜீரணிக்கவே முடியவில்லை. இன்னும் எத்தனை பேரின் வாழ்வை நாம் இப்படி சீக்கிரமே இழக்கப் போகிறோம்.
இதேபோல் அருண்ராஜா காமராஜின் இயக்கத்தில் கனா படத்தின் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “சிந்து” என பதிவிட்டு இதயம் நொறுங்கிப் போகும் குறியீடுகளை பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சதீஷ், “அவர்கள் காதலிக்கும் பொழுதிலிருந்தே நல்ல பழக்கம். மிக நல்ல பெண்... மிக நல்ல Pair... ஈடு செய்ய முடியாத இழப்பு அருண்ராஜா. Stay strong Miss u sister” என்று உருக்கமாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.
ALSO READ: 'பெரும் சோகம்'!.. அதிர்ச்சியை ஏற்படுத்திய "அசுரன், புதுப்பேட்டை" பட நடிகரின் மரணம்!