உடல்நலக்குறைவால் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரைப்பட இயக்குனர், நடிகர் & தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் சென்னை போருரில் உள்ள தனியார் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
T. ராஜேந்தர் கோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குனர். நடிகர், பின்னணிப் பாடகர், நடனக் கலைஞர் மற்றும் வசனகர்த்தா, பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் செயல்பட்டவர். 1980 களில், அவரது அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை. அவர் தனது திரைப்படங்களில் புது முகங்களை அறிமுகப்படுத்துவதில் பெயர் பெற்றவர், மேலும் அவரது படங்களில் அறிமுகமான அமலா, நளினி, ஜோதி, ஜீவிதா மற்றும் மும்தாஜ் உட்பட பல நடிகைகள் குறிப்பிடத்தக்க அளவில் தென்னிந்திய சினிமாவில் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு பூங்கா நகர் தொகுதியின் எம்எல்ஏ ஆனவர். தொகுதி மறுசீரமைப்பில் இத்தொகுதி நீக்கப்பட்டு விட்டது.
ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் மற்றும் மகன்கள் நடிகர் சிம்பு, குறலரசன், மகள் இலக்கியா ஆகியோர் ராஜேந்தரின் குடும்ப உறுப்பினர்கள் ஆவர்.