அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

Also Read | தீபிகா படுகோனே பிறந்தநாள்.. அசத்தலான போஸ்டரை வெளியிட்ட 'Project K' படக்குழு .!!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களை வினியோகம் செய்தும் வருகிறார்.
அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், டான் , காத்து வாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், விக்ரம், சர்தார், லவ் டுடே உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களை தம்முடைய ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
நடிகராக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி, மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத்தலைவன் படங்களில் நடித்திருந்தார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், சில நாட்களுக்கு மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, "அன்பு செலுத்தவோ.. அதை வெளிப்படுத்தவோ பயப்பட வேண்டாம். இயற்கையின் உன்னதத்தை புரிந்து கொள்ளும் வழிகளில் அன்பும் ஒன்று". என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களையும் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸையும் இயக்கியவர்.
Also Read | "ஜெட் ஸ்கை ஓட்ட கத்து கொடுத்ததே அஜித் சார் தான்😊".. மஞ்சு வாரியர் EXCLUSIVE