ஃபைட்டு? சூப்பர்!.. பாட்டு? செம.. கீர்த்தி சுரேஷ்?.. "நான் பாத்தது எனிமி’ங்க".. FDFS பரிதாபங்கள்.. VIDEO.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நவம்பர் 4-ஆம் தேதி ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படமும், விஷால் & ஆர்யா நடித்த எனிமி திரைப்படமும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போலவே இப்படங்கள் வெளியாகின.

FDFS Annaatthe or Enemy confusion public byte fun video
Advertising
>
Advertising

அதன்படி சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம், அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டது. இப்படத்தில் ரஜினியுடன் பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

FDFS Annaatthe or Enemy confusion public byte fun video

இதேபோல், விஷால் மற்றும் ஆர்யா நண்பன் - எதிரி என்கிற முரணில் நடித்துள்ளனர். தமன் பாடல்களை உருவாக்கிய இந்த படத்துக்கு, சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார்.  நேரடியாக திரையரங்குகளில் இன்று காலை முதல் வெளியான இப்படங்களுக்காக ரசிகர்கள் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இப்படங்களை திரையரங்குகளுக்கு சென்று பார்த்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் நாள் முதல் ஷோ பார்த்த இளம் பெண் ஒருவரிடம் நம் சேனல் நிரூபர்கள் படம் எப்படி இருக்கு என பப்ளிக் ரிவ்யூ கேட்டபோது, ஆக்‌ஷன், செண்டிமெண்ட், பாட்டு, ஃபைட் என எல்லாவற்றையும் சிலாகித்து பேசினார். பின்னர் கீர்த்தி சுரேஷின் நடிப்பு எப்படி இருந்தது என கேட்டபோது, “நான் எனிமி தானே பாத்தேன்” என்று இறுதியில் ட்விட்ஸ்ட் வைத்தார். இந்த வீடியோ இணைப்பில் உள்ளது.

பல மாதங்களாகவே திரையரங்குகள் கொரோனா காரணமாக, திறக்கப்படாமல் இருந்ததை அடுத்து பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, இந்த நவம்பர் 1-ஆம் தேதியில் இருந்து 100%  இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனிடையே சசிகுமார், சத்யராஜ், சமுத்திரகனி நடித்த எம்ஜிஆர் மகன் படம் டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆனது. இப்படி திரைப்படங்களின் கொண்டாட்டத்திலும் பரவசத்திலும் இப்படியான சின்ன சின்ன தமாஷான விஷயங்கள் நடந்துவிடுகின்றன. ஆனாலும் அவை ரசிக்கும்படியாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபைட்டு? சூப்பர்!.. பாட்டு? செம.. கீர்த்தி சுரேஷ்?.. "நான் பாத்தது எனிமி’ங்க".. FDFS பரிதாபங்கள்.. VIDEO. வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

FDFS Annaatthe or Enemy confusion public byte fun video

People looking for online information on Annaatthe, Arya, Enemy, Rajinikanth, Vishal will find this news story useful.