பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளவர் இயக்குனர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் 'பகாசூரன்'. இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Also Read | Bakasuran : படங்களில் சாதிக்கருத்துக்கள் பேசுவது குறித்து செல்வராகவன் சொல்வது என்ன ? EXCLUSIVE
ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் "பகாசூரன்" படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், தாராக்ஷி, ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா, ஆகியோர் நடித்துள்ளனர். சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு இயக்குனர் மோகன் ஜி, அவரது மனைவி ஆகியோர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதில், அவர்களின் மகளும் உடன் இருந்தார். இந்த பேட்டியில் கணவர் இயக்கும் திரைப்படங்கள் குறித்து மோகன் ஜி மனைவியும் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, கணவர் எடுக்கும் திரைப்படங்களை சுற்றி உருவாகும் விமர்சனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மோகன் ஜி மனைவி, "அவரு அந்த மைண்ட்செட் ல படம் எடுக்கல. இந்த மாதிரி ஒரு பேரு வரும்னு அவரு எடுக்கல. அது தானா நடந்துடுச்சு. அவர் பேசுற விஷயம் எல்லாமே கரெக்ட்டா இருக்கு. இப்ப தப்பா இருந்தா தான் தப்புன்னு சொல்லணும். யாருமே பேசாத விஷயம் தான் அவர் பேசுறாரு.
அதனால நான் அவருக்கு சப்போர்ட் தான் பண்ணுவேன். எந்த பிரச்சனை வந்தாலும் நான் Face பண்ண ரெடியா இருக்கேன். நீ தைரியமா பண்ணனும்ன்னு தான் நான் எப்பவும் சொல்லுவேன். நீ என்ன வேணா பண்ணு உன் சப்போர்ட்டா பின்னாடி நான் எப்பவுமே இருப்பேன்னு சொல்லுவேன். எப்பவுமே அவரை Encourage பண்ணுவேன். என்ன நடக்குதோ பாத்துக்கலாம், நீ அரெஸ்ட் ஆனாலும் நான் வந்து பெயில் எடுக்குறேன்னு.
திரௌபதி படம் வந்தப்போ ரொம்ப பயந்தேன். அப்ப நிறைய Issue வந்துச்சு. அதுக்கப்புறம் என்ன வந்தாலும் பாத்துக்கலாம்ன்னு சொல்லிட்டேன். நீ பண்றது தப்பு கிடையாது. Awareness வர்ற மாதிரி தான் நீ பண்ணிட்டு இருக்கே. அதுனால என்ன ஆனாலும் பரவாயில்ல. நமக்கு சப்போர்ட் பண்ணவும் ஆளுங்க இருக்காங்க" என்றார்.
தொடர்ந்து, மோகன் ஜி திரைப்படங்களில் பழமைவாதி போல படம் எடுப்பது பற்றியும், 30 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தும் படி திரைப்படங்கள் எடுப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவரது மனைவி, "அவர் அப்படி சொல்லமாட்டாரு. ஏன்னா ஒரு பொண்ணு வீட்ல எப்படி இருக்காங்களோ அது அவருக்கு தெரியும். அத Base பண்ணி தான் நிறைய விஷயம் பண்ணுவாரு. ருத்ரதாண்டவம், திரௌபதி படத்தில் வர சீன்ஸ் எல்லாம் எனக்கு புடிச்ச மாதிரி தான் இருந்தது. ஒரு பெண் எப்படி இருக்கணும்ன்னு நான் விரும்புற மாதிரி தான் இருந்துச்சு. அதனால அவர் அப்படி சொல்றதுக்கு சான்ஸ் இல்ல" என கூறினார்.
Also Read | தங்கலான் படப்பிடிப்பில் இருந்து சீயான் விக்ரம்.. "லுக்கு சும்மா தெறியா இருக்கே"...